/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து 7 பசுக்கள் பலி
/
மின்சாரம் பாய்ந்து 7 பசுக்கள் பலி
ADDED : அக் 15, 2024 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் தாலுகாவில் நான்கு பசு மாடுகள், வண்டலுார் தாலுகாவில் இரண்டு பசு மாடுகள், செங்கல்பட்டு தாலுகாவில் ஒரு பசு மாடு என, மொத்தம் ஏழு பசு மாடுகள், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து இறந்தன.
தகவலறிந்து வந்த அதிகாரிகள், மின்சாரத்தை துண்டித்து, மாடுகளை அப்புறப்படுத்தி, பிரதே பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, அந்தந்த பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.