/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
/
செங்கை மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கை மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
செங்கை மாவட்டத்தில் 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
ADDED : டிச 18, 2025 05:44 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தொகுதிகளில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி, கடந்த நவ., 4ம் தேதி துவங்கி, 14ம் தேதி நிறைவடைந்தது.
மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் உள்ள 27 லட்சத்து 87,362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கினர்.
இதில், 3,149 பேர் பணியில் ஈடுபட்டனர்.
மேற்கண்ட தொகுதிகளில், கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெறும் பணிகள் நிறைவு பெற்றன.
இதில் இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள், வசிப்பிடத்தில் இல்லாதவர்கள் என, 7 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
இதுதொடர்பாக, அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுடையோர் பெயர் நீக்கப்பட்டிருந்தால், மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, 6வது படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
''வாக்காளர் கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள் அனைவரது பெயரும், வாக்காளர் பட்டியலில் வெளியிடப்படும்,'' என, கலெக்டர் சினேகா தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்கள், வசிப்பிடத்தில் இல்லாத வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் 2 லட்சத்து 18,444 பேர், பல்லாவரம் சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து 49,789, தாம்பரம் சட்டசபை தொகுதியில், 1 லட்சத்து 21,137, செங்கல்பட்டு சட்டசபை தொகுதியில் 1 லட்சத்து 6,270, திருப்போரூர் சட்டசபை தொகுதியில் 47,558, செய்யூர் சட்டசபை தொகுதியில் 32,394 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மதுராந்தகம் சட்டசபை தொகுதியில் 26,309 என, மொத்தம் 7 லட்சத்து 1,901 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 27 லட்சத்து 87,362 பேரில், 7 லட்சத்து, 1,901 வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 20 லட்சத்து 85, 461 வாக்காளர்கள் உள்ளனர்.

