/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு
/
லிப்ட்டில் சிக்கிய 7 பேர் மீட்பு
ADDED : செப் 28, 2025 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலைமையூர் கிராமத்தில் செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் உள்ள லிப்ட்டில் நேற்று காலை நிதி நிறுவன ஊழியர்கள் 7 பேர் முதல் தளத்திற்கு சென்றனர். அப்போது எதிர்பாரத விதமாக லிப்ட்டின் கதவுகள் திறக்க முடியாமல் லாக் ஆனது.
செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள் சென்று நவீன கருவிகளை பயன்படுத்தி உள்ளே சிக்கி இருந்த 7 பேரையும் பத்திரமாக மீட்டனர். அதிக ஆட்கள் சென்றதால், எடை தாங்காமல் சம்பவம் நடந்துள்ளது.