/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு
/
வீடு பூட்டை உடைத்து 7 சவரன் திருட்டு
ADDED : ஜன 20, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்களத்துார், பெருங்களத்துார், சீனிவாசா நகர், லட்சுமி தெருவை சேர்ந்தவர் ரமேஷ், 38. செங்கல்பட்டில் உள்ள தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஜன., 18ல், வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் திருப்பதிக்கு சென்றார். நேற்று அதிகாலை வீடுதிரும்பினர். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஏழு சவரன் நகை, 14,000 ரூபாய் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.

