/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திடீர் மழையால் 700 நெல் மூட்டை நணைந்து நாசம்
/
திடீர் மழையால் 700 நெல் மூட்டை நணைந்து நாசம்
ADDED : ஏப் 17, 2025 01:17 AM

செய்யூர்:சித்தாமூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பகலில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது.
கத்திரி வெயில் மே 4ம் தேதி துவங்க உள்ள நிலையில், தற்போது அதிக வெயில் அடுப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் வெப்பச் சலனம் காரணமாக சித்தாமூர் மற்றும் சுற்றவட்டார பகுதியில் நேற்று காலை 11: 30 மணிக்கு துவங்கி 12: 40 வரை மழை பெய்தது. பகல் முழுதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், வெயிலின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிறிது நேரம் மழை பெய்தது. தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
செய்யூர் மற்றம் சுற்றுவட்டாரப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதியில் 30,000 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு விவசாய நிலம் உள்ளது.
அதிகபடியாக சம்பா பருவத்தில் நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது. சம்பா பருவத்தில் அக்., நவ., டிச., மாதங்களில் பயிரிடப்பட்ட நெல், விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்கொள்முதல் செய்ய, செய்யூர் மற்றும் மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் சித்தாமூர் ஒன்றியத்தில் 86 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில் நேற்று பெய்த திடீர் கோடை மழையால், மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பு இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்த , 7.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 700க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நணைந்து நாசமாகின.
நுகர்பொருள் வாணிபர் கழகத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை உடனுக்குடன் பாதுகாப்பாக சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.