/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.3.47 கோடியில் 7,309 கி.மீ., துாரம் சாலை பணி நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி கூட்டத்தில் முடிவு
/
ரூ.3.47 கோடியில் 7,309 கி.மீ., துாரம் சாலை பணி நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி கூட்டத்தில் முடிவு
ரூ.3.47 கோடியில் 7,309 கி.மீ., துாரம் சாலை பணி நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி கூட்டத்தில் முடிவு
ரூ.3.47 கோடியில் 7,309 கி.மீ., துாரம் சாலை பணி நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி கூட்டத்தில் முடிவு
ADDED : பிப் 22, 2024 12:55 AM
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சியில், நகர மன்ற கூட்டம் தலைவர் கார்த்திக் தலைமையில் நடந்தது. இதில், நகராட்சி கமிஷனர் தாமோதரன், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகராட்சி வார்டு எண்: 1 முதல் 30 வரை அனைத்து பகுதிகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:
l அனைத்து பகுதிகளிலும், மின் கம்பங்களில் உள்ள தெரு மின் விளக்குகளுக்கு தனியாக மின் கம்பிகள் அமைத்து, அதை ஒரே இடத்தில் கண்காணித்து கட்டுப்படுத்த, கட்டுப்பாடு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
lவார்டு எண்: 18ல் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கும், வார்டு எண் 8ல் வள்ளலார் நகர் பூங்காவில் பேட்மின்டன் கூடைப்பந்து களம் உள்ளிட்டவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
lவார்டு எண்: 30ல் பங்கஜம்மா நகர் பூங்காவில் நடைபாதை மற்றும் பசுமை செடிகள் அமைக்கவும், திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள நந்திவரம் தொடக்கப்பள்ளி, கூடுவாஞ்சேரி நடுநிலைப்பள்ளி மற்றும் காமராஜபுரம் தொடக்கப்பள்ளி, நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பள்ளிகளில் சீரமைப்பு பணிகளை விரைவில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
lமேலும் நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளில் சாலை பணிகளை மேற்கொள்ள, 15வது நிதிக்குழு மானியம், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு நிதி 3.47 கோடி ரூபாயில் 7,309 கி.மீ., துாரத்தில் சாலை பணி மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, மழைநீர் வடிகால்வாய் சீரமைப்பு பணிகளை செய்து தர வேண்டி பொதுமக்கள் மூலம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இப்பணிகளை பொது நிதி மற்றும் குடிநீர் நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.