/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காலை 7:47 மணி ரயில் சேவை ரத்து தாம்பரம் - செங்கை பயணியர் அவதி
/
காலை 7:47 மணி ரயில் சேவை ரத்து தாம்பரம் - செங்கை பயணியர் அவதி
காலை 7:47 மணி ரயில் சேவை ரத்து தாம்பரம் - செங்கை பயணியர் அவதி
காலை 7:47 மணி ரயில் சேவை ரத்து தாம்பரம் - செங்கை பயணியர் அவதி
ADDED : அக் 01, 2024 12:33 AM

சென்னை, -சென்னை கடற்கரை -- தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், தினமும் 250க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரையிலான புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள்அதிகரித்து வருகின்றன. இதனால், நாளுக்கு நாள் பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பயணியர் நலனை கருத்தில் வைத்து, தாம்பரம் - செங்கல்பட்டிற்கு நெரிசல் மிக்க நேரங்களில், மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காலை 7:10, 7:20, 7:35, 7:47, 8:00 மணிக்கு, தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இது பெரும் பாலனோருக்கு மிகவும் வசதியாக இருந்து வருகிறது. இந்நிலையில், காலை 7:47 மணி ரயில் திடீரென எந்தவித அறிவிப்பு இன்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் பயணியர் நெரிசல் அதிகரித்து வருகிறது. சாலை வழி நெரிசல் அதிகரித்து வருவதால், கூடுதல் ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில், காலை 7:47 மணி ரயில் எந்த அறிவிப்பு இன்றி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது, பயணியர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பயணியரின் கோரிக்கையை ரயில்வே அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, 'பயணியரின் புகார் குறித்து ஆய்வு செய்யப்படும்' என்றார்.