/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இட்லி சாப்பிட்ட 8 ஆடுகள் உயிரிழப்பு
/
இட்லி சாப்பிட்ட 8 ஆடுகள் உயிரிழப்பு
ADDED : பிப் 03, 2025 01:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்,:-மதுராந்தகம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் லலிதா, 65. இவர், எட்டு வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று காலை வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியில் இருந்த விவசாய நிலம் அருகே கிடந்த, இட்லிகளை ஆடுகள் தின்றுள்ளது.
சிறிது நேரம் கழித்து, ஆடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக உயிரிழந்தன.
விவசாய நிலங்களில் புகும் காட்டுபன்றிகளை கொல்ல இட்லியில் யாராவது விஷம் வைத்தனரா? ஆடுகள் எதனால் உயிரிழந்தன என, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

