/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
8 நெல் கொள்முதல் நிலையங்கள் லத்துார், சித்தாமூரில் துவக்கம்
/
8 நெல் கொள்முதல் நிலையங்கள் லத்துார், சித்தாமூரில் துவக்கம்
8 நெல் கொள்முதல் நிலையங்கள் லத்துார், சித்தாமூரில் துவக்கம்
8 நெல் கொள்முதல் நிலையங்கள் லத்துார், சித்தாமூரில் துவக்கம்
ADDED : பிப் 19, 2025 07:40 PM
சித்தாமூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன.
சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.
இப்பகுதியில் அதிகபடியாக சம்பா பருவத்தில் நெல் மற்றும் மணிலா விவசாயம் செய்யப்படுகிறது.
சம்பா பருவத்தில் அக்., நவ., மாதத்தில் பயிரிடப்பட்ட நெல், விளைந்து அறுடைக்கு தயாராகி தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில், சித்தாமூர் ஒன்றியத்தில் 19 இடங்களில் விவசாயிகள் இடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி காவனுார், சூணாம்பேடு, இல்லீடு, மணப்பாக்கம், அரசூர், வெடால், நாங்களத்துார் மற்றும் பருக்கல் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கப்பட்டன.