sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வாடகைக்கு விடப்பட்ட 8 பைக்குகள் பறிமுதல்

/

வாடகைக்கு விடப்பட்ட 8 பைக்குகள் பறிமுதல்

வாடகைக்கு விடப்பட்ட 8 பைக்குகள் பறிமுதல்

வாடகைக்கு விடப்பட்ட 8 பைக்குகள் பறிமுதல்


ADDED : ஆக 14, 2025 02:25 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் பகுதிகளில், வாடகைக்கு விடப்பட்ட எட்டு பைக்குகளை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில், பைக்குகளை வாடகைக்கு விட, தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி, வாடகைக்கு விடப்படும் பைக்குகளை பறிமுதல் செய்ய, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டாங்கொளத்துார், மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பைக்குகள் வாடகைக்கு விடப்படுவதாக, வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் மறைமலை நகர், காட்டாங்கொளத்துார் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது, வாடகைக்கு விடப்பட்ட, எட்டு பைக்குகள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்து, உரிமையாளர்களுக்கு தலா, 8,000 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us