/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நில அபகரிப்பு பிரிவில் 80 வழக்குகளுக்கு தீர்வு
/
நில அபகரிப்பு பிரிவில் 80 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 20, 2025 09:04 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு, நில அபகரிப்பு பிரிவில், கடந்த ஆண்டு 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபரிகரிப்பு பிரிவு உள்ளது. இங்கு, நில அபகரிப்பு சம்பந்தமாக மனுக்கள் அளிக்கப்படுகின்றன.
இந்த மனுகள் மீது விசாரணையில் தாமதம் ஏற்படுவதாக, புகார் எழுந்தது.
இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க, மாவட்டத்தில் வருவாய்த்துறை, காவல் துறை, பதிவுத்துறை, நில அளவைத் துறை சார்ந்த அலுவலர்கள் கொண்டு, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு அமைத்து, அரசு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, மாவட்ட காவல் அலுவலகத்தில், நில அபகரிப்பு சிறப்பு பிரிவு குறை தீர்க்கும் கூட்டம், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமையில், மாவட்ட பதிவாளர் புனிதா, தாசில்தார் நடராஜன், மண்டல சர்வேயர் லோகநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து ஆகியோர், கடந்த ஆண்டு, 27 கூட்டங்கள் நடத்தினர்.
இதில், 135 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டத்தில், 80 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
மற்ற மனுக்களுக்கு மனுதாரர்கள் தரப்பில், உரிய ஆவணங்கள் செலுத்தாததால், நீதிமன்றங்களில் சென்று தீர்வு காணலாம். இந்த கூட்டம் ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க்கிழமைதோறும் நடைபெறுகிறது. இதில், நில அபகரிப்பு தொடர்பான மனுக்கள் அளித்து தீர்வு காணலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.