/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளஸ் 1 மாணவர்கள் 89.17 சதவீதம் தேர்ச்சி
/
பிளஸ் 1 மாணவர்கள் 89.17 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 16, 2025 10:09 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் - 1 பொதுத்தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் 29,621 பேரில், 26,412 பேர் தேர்ச்சி பெற்று, 89.17 சதவீதம் பெற்றனர். 61 பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன.
கடந்தாண்டு, 90.85 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 22 வது இடம் பெற்றது. இந்த ஆண்டு, 89.17 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 32வது இடம் பெற்றது.
அரசு, நகராட்சி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளைச் சார்ந்த மொத்த 12,491 மாணவ - மாணவியரில், 10,008 பேர் தேர்ச்சி பெற்று, 80.12 சதவீதம் பெற்றனர்.
இதில், மாணவர்கள் 5,520 பேர் தேர்வு எழுதியதில், 3,945 பேர் தேர்ச்சி பெற்று, 71.47 சதவீதமும், மாணவியர் 6,971 பேரில் 6,063 பேர் தேர்ச்சி பெற்று 86.97 சதவீதமும் பெற்றனர்.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தேர்வு எழுதிய மொத்தம் 4,432 மாணவ -மாணவியரில், 4,013 தேர்ச்சி பெற்று, 89.54 சதவீதம் பெற்றனர். தேர்வு எழுதிய மாணவர்கள் 1,751 பேரில், 1,449 தேர்ச்சி பெற்று, 83.43 சதவீதமும், மாணவியர் 2,681 பேரில், 2,564 பேர் தேர்ச்சி பெற்று, 93.58 சதவீதமும் பெற்றனர்.
மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளில் தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் 12,698 பேரில், 12,391 பேர் தேர்ச்சி பெற்று, 96.75 சதவீதம் பெற்றுள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள் 6,721 பேரில், 6,497 பேர் தேர்ச்சி பெற்று 93.28 சதவீதமும், மாணவியர் 5,977 பேரில், 5,894 பேர் தேர்ச்சி பெற்று, 98.24 சதவீதமும் பெற்றனர்.
செங்கல்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பாலுார் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலை பள்ளி, குமிழி ஏகலைவா உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.