/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி ஆசிரியையிடம் 9 சவரன் செயின் பறிப்பு
/
பள்ளி ஆசிரியையிடம் 9 சவரன் செயின் பறிப்பு
ADDED : செப் 28, 2024 07:42 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சகிலா, 32. இவருக்கு, 7 வயது மகள், 5 வயது மகன் உள்ளனர். சகிலா, படூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது மகள், மகனும் அதே பள்ளியில் படிக்கின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, சகிலா பள்ளி முடிந்து, இரண்டு பிள்ளைகளையும் வீட்டிற்கு அழைத்து சென்றார். அப்போது, பள்ளி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து, சகிலாவை மிரட்டியுள்ளனர்.
அப்போது, 7 வயது மகள் பயந்து, 20 மீட்டர் தொலைவிற்கு ஓடியுள்ளார். மர்ம நபர்கள், 'நகையை கழற்றுக்கொடு, இல்லையென்றால் உன் மகளை துாக்கிச் சென்றுவிடுவோம்' என, மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன சகிலா, தான் அணிந்திருந்த 9 சவரன் தங்கசெயினை கழற்றி கொடுத்துவிட்டார். அதைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள், உடனே அங்கிருந்து தப்பினர்.
இதுகுறித்து, புகாரின் அடிப்படையில், கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.