ADDED : செப் 13, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் சிறப்பு முகாமில், 95 மனுக்களுக்கு, தீர்வு காணப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில் பாரேரி, கானாத்துார், புதுப்பேட்டை, மாமல்லபுரம், பொருந்தவாக்கம், நந்திவரம் ஆகிய கிராமங்களில், ரேஷன் கார்டு திருத்தம் முகாம், நேற்று நடந்தது.
இந்த முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை கோரி, 95 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்கள் மீது, அந்தந்த தாலுகாக்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலர்கள் பரிசீலனை செய்து தீர்வு கண்டதாக, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.