/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
டெங்கு காய்ச்சலால் பாதிப்பு செய்யூரில் 6 வயது சிறுமி பலி
/
டெங்கு காய்ச்சலால் பாதிப்பு செய்யூரில் 6 வயது சிறுமி பலி
டெங்கு காய்ச்சலால் பாதிப்பு செய்யூரில் 6 வயது சிறுமி பலி
டெங்கு காய்ச்சலால் பாதிப்பு செய்யூரில் 6 வயது சிறுமி பலி
ADDED : நவ 05, 2024 11:35 PM

செய்யூர்:செய்யூர் அடுத்த தேவராஜபுரம் கிராமத்தை சார்ந்தவர் ராஜகுரு, 33. இவரது மனைவி அமுல், 28. தம்பதியரின் இளையமகள் யாத்திகா, 6, செய்யூரில் உள்ள தனியார் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வந்தார்.
சில நாட்களாக, காய்ச்சலால் யாத்திகா அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி காய்ச்சல் அதிகரித்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, அவரை பரிசோதித்ததில், டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த யாத்திகா, நேற்று காலை 10:00 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழந்தது, செய்யூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.