/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்கம்பத்தில் கார் மோதி விபத்து
/
மின்கம்பத்தில் கார் மோதி விபத்து
ADDED : ஜன 19, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் - -செங்கல்பட்டு சாலையில், நேற்று, காலை 10:30 மணி அளவில் கார் ஒன்று சென்றது. இதில் கார் உரிமையாளர் முருகன் உட்பட நான்கு பேர் பயணித்தனர். சுதாகர் என்பவர் காரை ஓட்டினார்.
செம்பாக்கம் பகுதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மின்கம்பத்தில் மோதி முட்புதரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காரை ஓட்டி சென்ற சுதாகருக்கு மட்டும் கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. மற்ற அனைவரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

