/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
/
கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
கருநிலம் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த சரக்கு வாகனம்
ADDED : செப் 25, 2025 01:23 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், தனியார் ரப்பர் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு நேற்று மாலை, புதுடில்லியில் இருந்து மூலப்பொருள் ஏற்றிக்கொண்டு, 'எய்ச்சர்' சரக்கு வாகனம் வந்தது.
அதன் பின், பொருட்களை தொழிற்சாலையில் இறக்கி விட்டு, வாகனம் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது, வாகனத்தின் பின்புறம் திடீரென தீப்பற்றி எரியத் துவங்கியது.
இதனைக் கண்ட தொழிற்சாலை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகேந்திரா சிட்டி தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இது குறித்து மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.