/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிகிச்சை பலனின்றி மாணவி பலி தகராறு செய்த உறவினர்கள் மீது வழக்கு
/
சிகிச்சை பலனின்றி மாணவி பலி தகராறு செய்த உறவினர்கள் மீது வழக்கு
சிகிச்சை பலனின்றி மாணவி பலி தகராறு செய்த உறவினர்கள் மீது வழக்கு
சிகிச்சை பலனின்றி மாணவி பலி தகராறு செய்த உறவினர்கள் மீது வழக்கு
ADDED : செப் 28, 2024 04:51 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு பகுதியைச் சேர்ந்த மணவாளன் மகள் மனோஜிதா, 20. கழிப்பட்டூர் தனியார் கல்லுாரியில், பி.டெக்., கெமிக்கல் இன்ஜியரிங் மூன்றாம் ஆண்டு படித்தார்.
கடந்த 26ம் தேதி, வீட்டில் உறங்கியபோது, காலை 4:45 மணிக்கு, அவரது இடது கை நடுவிரலில் விஷ பூச்சி கடித்துள்ளது. மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில், முதலுதவி சிகிச்சை அளித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சைபலனின்றி, அதேநாள் இரவு 11:00 மணிக்கு இறந்தார். இதுகுறித்து தந்தை, மாமல்லபுரம் போலீசில் நேற்று அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்ணாடி உடைப்பு
சிகிச்சை பலனின்றி மனோஜிதா உயிரிழந்ததால், அவரின் உறவினர்கள் தீவிர சிகிச்சை பிரிவு அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தனர்.
தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார், உறவினர்களை சமாதானம் செய்தனர்.
மருத்துவமனையில், பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, சிறுதாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ், 37, அருண், 43, உள்ளிட்ட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.