/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மீது வழக்கு பதிவு
/
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மீது வழக்கு பதிவு
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மீது வழக்கு பதிவு
போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மீது வழக்கு பதிவு
ADDED : செப் 30, 2024 06:38 AM
மறைமலை நகர், : சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி எண்ணுார் தனசேகரன், 41. இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவை மத்திய சிறையில் இருந்த தனசேகரன், 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை, வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களில் ஆஜர்படுத்த, போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தனசேகரனை, நேற்று முன்தினம் மீண்டும் கோவை சிறைக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வந்தன.
அப்போது, தனசேகரிடம் உடைமைகளை எடுத்துச் செல்லும்படி, தலைமை காவலர் சடகோபராஜ் கூறியதாக கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனசேகரன் வெளியில் வந்து உன்னை துாக்கி விடுவேன் என, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
புகாரின்படி செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.