/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிகிச்சை பலனின்றி மாணவி பலி மருத்துவமனையை தாக்கிய உறவினர்கள் மீது வழக்கு

ADDED : செப் 28, 2024 12:58 AM

செங்கல்பட்டு;திருப்போரூர் அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்தவர் மனோஜிதா,20. சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி. டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
மனோஜிதா வீட்டில் இருந்தபோது கையில் ஏதோ கடித்து போல இருக்கவே பெற்றோரிடம் கூறவே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மனோஜிதா உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவர்கள் மனோஜிதாவின் உறவினர்களிடம் கூறியபோது ஆத்திரமடைந்த அவர்கள் மருத்துவமனை யில் தீவிர சிகிச்சை பிரிவு அறையின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் உறவினர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவமனையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சிறுதாவூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்,37.அருண், 43. உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.