/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவியை சேர்த்து வைக்க கோரி டவரில் ஏறி போதை நபர் ரகளை
/
மனைவியை சேர்த்து வைக்க கோரி டவரில் ஏறி போதை நபர் ரகளை
மனைவியை சேர்த்து வைக்க கோரி டவரில் ஏறி போதை நபர் ரகளை
மனைவியை சேர்த்து வைக்க கோரி டவரில் ஏறி போதை நபர் ரகளை
ADDED : அக் 14, 2025 08:34 PM
புதுப்பட்டினம்:வாயலுாரில், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, மொபைல் போன் 'டவர்' மீது ஏறிய போதை நபரால் சலசலப்பு ஏற்பட்டது. கல்பாக்கம் அடுத்த வாயலுார் காரைத்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் குரு, 30. மது பழக்கத்திற்கு அடிமையான இவரை விட்டு பிரிந்த இவரது மனைவி, தன் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
இதனால் விரக்தியில் இருந்த குரு, நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில் மது அருந்திவிட்டு, அங்குள்ள மொபைல் போன் 'டவர்' உச்சியில் ஏறியுள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதியினர், அவரை கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர்.
சதுரங்கப்பட்டினம் போலீசார், திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து, அவருடன் பேசிய போது, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
பின், நேற்று முன்தினம் இரவு 8:00 மணி வரை டவரில் இருந்த அவர், கூட்டம் கலைந்ததும் கீழே இறங்கி தப்பினார். இதனால், அப்பகுதியில் ஆறு மணி நேரம் சலசலப்பு ஏற்பட்டது.