/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'கமிஷன்' கொடுத்தால் முன்னுரிமை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு
/
'கமிஷன்' கொடுத்தால் முன்னுரிமை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு
'கமிஷன்' கொடுத்தால் முன்னுரிமை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு
'கமிஷன்' கொடுத்தால் முன்னுரிமை நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு
ADDED : அக் 14, 2025 08:32 PM
திருப்போரூர்:நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் அடுத்த ராயல்பட்டு கிராமத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, சுற்றுவட்டார கிராம விவசாயிகள், நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
நெல் விற்பனை செய்யும் போது, அங்குள்ள பணியாளர்கள் வழக்கமான 'கமிஷன்' வசூலிக்கின்றனர்.
நெல்லை விற்பனை செய்யும் வேலை முடிந்தால் போதும் என எண்ணி, விவசாயிகளும் இதை கண்டுகொள்வதில்லை.
ஆனால் தற்போது, குறைந்த நெல்லை கொண்டுவரும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வது தவிர்க்கப்படுவதாகவும், அதிக நெல்லை விற்பனை செய்து, அதிக கமிஷன் தரும் விவசாயிகளின் நெல் முதலில் கொள்முதல் செய்யப்படுவதாகவும், விவசாயிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதனால் சிறிய விவசாயிகள், நாள் கணக்கில் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவித்து வைத்து மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதேபோன்று, மற்ற பகுதிகளில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களிலும் முறைகேடு நடப்பதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.