/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு
/
குளத்தில் தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழப்பு
ADDED : மார் 07, 2024 10:58 AM
மேடவாக்கம்:சென்னை, பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம், காந்திநகர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அரிகிருஷ்ணன், அபிநயா தம்பதிக்கு, 2 வயதுடைய தன்ஷிகா என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்று காலை 10:00 மணியளவில், குழந்தையைக் காணவில்லை என, அபிநயா தேடியுள்ளார். பின், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேடிய போது, வீட்டின் அருகிலுள்ள குளத்தில், குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது தெரிந்தது. உடனே குழந்தையை மீட்டு, மேடவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
தகவலின்படி வந்த பள்ளிக்கரணை போலீசார், குழந்தை உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

