/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு பஸ் மோதி விபத்து சாலையில் கவிழ்ந்த கார்
/
அரசு பஸ் மோதி விபத்து சாலையில் கவிழ்ந்த கார்
ADDED : பிப் 13, 2024 04:22 AM

மறைமலை நகர், : சென்னையில் இருந்து திருச்சி நோக்கி, அரசு பேருந்து 40 பயணியருடன் திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
சிங்கபெருமாள் கோவில் அருகில் மேம்பால பணிகள் நடைபெறும் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னே சென்ற 'சுசூகி ஸ்விப்ட்' கார் மீது மோதியது.
இதில், நடுரோட்டிலேயே கவிழ்ந்த கார், மேம்பால கட்டுமான பணிகளில் மோதி நின்றது. நல்வாய்ப்பாக, காரில் பயணம் செய்த தஞ்சாவூரை சேர்ந்த தம்பதி, காயங்களுடன் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார், கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் காரை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.