/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விஷப்பூச்சிகளின் புகலிடமான தானிய கிடங்கு கட்டடம்
/
விஷப்பூச்சிகளின் புகலிடமான தானிய கிடங்கு கட்டடம்
ADDED : நவ 10, 2024 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்,:மதுராந்தகத்தில் சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, 1986ம் ஆண்டு மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், தானிய கிடங்கு கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
கட்டடம் பழமையானதால், தற்போது வேளாண் துறை அலுவலக வளாகத்தில், புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. 40 ஆண்டுகளை கடந்து, கட்டடம் பழமையாக உள்ளதால், விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக மாறியுள்ளது.
எனவே, பயன்பாடின்றி உள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.