/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி மாணவியிடம் சீண்டல் ஒருவர் கைது; இருவர் மாயம்
/
பள்ளி மாணவியிடம் சீண்டல் ஒருவர் கைது; இருவர் மாயம்
பள்ளி மாணவியிடம் சீண்டல் ஒருவர் கைது; இருவர் மாயம்
பள்ளி மாணவியிடம் சீண்டல் ஒருவர் கைது; இருவர் மாயம்
ADDED : செப் 19, 2024 07:52 PM
திருப்போரூர்:திருப்போரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டவர், 14 வயது மாணவி. இவர் 9ம் வகுப்பு படிக்கிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, இயற்கை உபாதை கழிப்பதற்காக, ஒதுக்குபுறமாக சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மூன்று பேர், மாணவியை மடக்கி பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அவர்களிடமிருந்து தப்பிய மாணவி, கூச்சல்போட்டு ஓடிவந்தார். அதைக்கண்ட அப்பகுதியினர், மூன்று வாலிபர்களை விரட்டினர். அதில் மாட்டிய ஒருவரை பிடித்து, தாழம்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், மாணவி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. பிடிபட்ட நபர், சிட்லபாக்கம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து, பிடிபட்ட நபரிடம் விசாரித்து வருகின்றனர்.