/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுரங்கப்பட்டினம் கடலில் அதிசய கல் மிதந்து வியப்பு
/
சதுரங்கப்பட்டினம் கடலில் அதிசய கல் மிதந்து வியப்பு
சதுரங்கப்பட்டினம் கடலில் அதிசய கல் மிதந்து வியப்பு
சதுரங்கப்பட்டினம் கடலில் அதிசய கல் மிதந்து வியப்பு
ADDED : அக் 22, 2025 11:01 PM

சதுரங்கப்பட்டினம்: சதுரங்கப்பட்டினம் கடலில் மிதந்த அதிசய கல்லை, மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.
சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் மனோஜ்குமார், கடந்த 20ம் தேதி, கடலில் மீன்பிடிக்கச் சென்றார். மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, கடலில் வெண்மை நிறத்தில், செவ்வக வடிவ பொருள் மிதந்ததைக் கண்டு, படகிற்கு கொண்டு வந்தார்.
20 கிலோ எடையுள்ள அதை சுரண்டிய போது, துகளாக உதிர்ந்துள்ளது.
கட்டுமானத்திற்கு பயன்படும்,'ஹாலோபிளாக்' கல்லை போன்று இருந்த அதை, மீண்டும் கடலில் வீசியுள்ளார்.
எடையுள்ள பொருளாக இருந்தும், அது நீருக்குள் மூழ்காமல் நீரின் மேற்பரப்பில் மிதந்ததை கண்டு வியந்துள்ளார்.
நேற்று காலை கடலுக்குச் சென்ற போது, அப்பொருள் வேறிடத்தில் மிதந்ததால், அதை கரைக்கு கொண்டு வந்துள்ளார்.