/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பேராசிரியைக்கு தொல்லை பேராசிரியருக்கு 'காப்பு'
/
பேராசிரியைக்கு தொல்லை பேராசிரியருக்கு 'காப்பு'
ADDED : மார் 20, 2025 01:20 AM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூரில் தனியார் பல்கலை உள்ளது. இந்த பல்கலையில் கணினி அறிவியல் பிரிவில் பேராசிரியராக, சஞ்சீவ்ராஜ், 36, என்பவர் பணியாற்றி வருகிறார்.
அதே பல்கலையில், 27 வயதுடைய பெண் ஒருவர், 'பி.எச்டி., படித்துக்கொண்டு, பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
தொடக்கத்தில் இவர்கள் நண்பர்களாக பழகி, பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் பின் சஞ்சீவ்ராஜ், பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பேராசிரியை, சக பேராசிரியைகளிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை, சஞ்சீவ்ராஜ் மீண்டும், பேராசிரியையிடம் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
இதையறிந்த அங்கிருந்த சக பேராசிரியர்கள், சஞ்சீவ்ராஜை நன்கு கவனித்துள்ளனர்.
மாணவ, மாணவியரும் சஞ்சீவ்ராஜை பிடித்து, தர்ம அடி கொடுத்து, சிறைபிடித்து வைத்திருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பேராசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
இதில், சஞ்சீவ்ராஜ் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து சஞ்சீவ்ராஜை, போலீசார் கைது செய்தனர்.