/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
/
கூடுவாஞ்சேரியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
கூடுவாஞ்சேரியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
கூடுவாஞ்சேரியில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
ADDED : பிப் 03, 2024 12:07 AM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, மூன்று, நான்கு, 10, 16, 15, 26, 25, 24 ஆகிய எட்டு வார்டுகளில் உள்ள மக்களுக்கு, செங்கல்பட்டில் இருந்து வந்த பாலாறு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணி காரணமாக, செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் பைப் லைன் உடைந்து, குடிநீர் வினியோகம் தடைப்பட்டது.
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில், டிராக்டர்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இப்பகுதிவாழ் மக்களின் கோரிக்கையை ஏற்று, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் மேற்கொண்ட முயற்சியால், பெருமாட்டுநல்லுாரில் இருந்து வரும் தண்ணீரை வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
பணிகள் முடிந்ததை தொடர்ந்து, 15 மற்றும் 16வது வார்டுக்கு உட்பட்ட வேலியம்மன் கோவில் அருகில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் பைப்பை, நேற்று அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கலெக்டர் அருண்ராஜ், நகராட்சி கமிஷனர் தாமோதரன், தலைவர் கார்த்திக், துணைத்தலைவர் லோகநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

