ADDED : அக் 29, 2024 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி : மண்ணிவாக்கம் - வண்டலுார் சாலையில், நேற்று மதியம் பாலுாரில் இருந்து கருங்கற்களை ஏற்றிக்கொண்டு, வண்டலுார் நோக்கி டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது, 30 வயதுடைய வடமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குடிபோதையில் சாலையை திடீரென கடக்க முயன்ற போது, லாரியின் சக்கரம் தலையின் மீது ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், லாரி டிரைவர் கமல் கண்ணன், 42, என்பவரை கைது செய்து, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.