/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : அக் 26, 2024 08:58 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி சண்முகா நகர் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு, 47. இவர், புதிதாக ஆயில் கம்பெனி கட்டடம் கட்டி வருகிறார்.
இக்கட்டடம் கட்டுவதற்கு, அயனாவரத்தைச் சேர்ந்த டேனியல், 68, என்பவரிடம் ஒப்பந்தம் விட்டுள்ளார். இவர், பணியாளர்களை வைத்து கட்டட வேலைகளை பார்வையிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் வேலைகளை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, 12 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயம் அடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.