/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டரை சாலையில் பாலம் அமைக்க வேண்டுகோள்
/
தண்டரை சாலையில் பாலம் அமைக்க வேண்டுகோள்
ADDED : மார் 18, 2024 02:59 AM

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே தண்டரை கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். தண்டரை கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும் சிமென்ட் சாலை உள்ளது.
தினசரி சாலையில் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. மழைநீர் செல்ல சாலை, நடுவே சிமென்ட் குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இரண்டு குழாய்களுக்கு இடையே பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில், சாலை நடுவே உள்ள குழாய்களை அகற்றி, சிறுபாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

