/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பெருக்கரணை சுகாதார மையத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்
/
பெருக்கரணை சுகாதார மையத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்
பெருக்கரணை சுகாதார மையத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்
பெருக்கரணை சுகாதார மையத்தை சீரமைத்து பராமரிக்க வேண்டுகோள்
ADDED : செப் 19, 2024 12:43 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பெருக்கரணை ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, பள்ளி அருகே அரசு ஆரம்ப துணை சுகாதார மையம், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
கர்ப்பிணியருக்கான பரிசோதனை, முதலுதவி, குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் இங்கு அளிக்கப்பட்டன. மேலும், சாதாரண காய்ச்சல், சளி, தலைவலி போன்ற நோய்களுக்கு, மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.
இதனால், புத்துார், தண்டலம், பேரம்பாக்கம், முகுந்தகிரி உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும், 2,000த்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன், முறையான பராமரிப்பு இல்லாமல், ஆரம்ப துணை சுகாதார மையம் செயல்படாமல் நிறுத்தப்பட்டது. அதனால், தற்போது அரசு ஆரம்ப துணை சுகாதார மைய கட்டடம் புதர் மண்டி, விஷப் பூச்சிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது.
இதனால், தற்போது கிராம மக்கள் சிகிச்சைகளுக்காக, பொலம்பாக்கம் அல்லது கயப்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, இப்பகுதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு, பராமரிப்பின்றி மூடப்பட்ட அரசு ஆரம்ப துணை சுகாதார மையத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் கொண்டுவர, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.