/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் வாலிபர் தற்கொலை
/
மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் சோகத்தில் வாலிபர் தற்கொலை
ADDED : செப் 30, 2024 05:52 AM
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த சித்தமனுார் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ், 23. மறைமலை நகரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு காட்டாங்கொளத்துாரை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.
வெங்கடேஷ் - சங்கீதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சங்கீதா தனது அம்மா வீட்டிற்கு, சில மாதங்களுக்கு முன் சென்று விட்டார்.
குழந்தையை வெங்கடேஷன் கவனித்து வந்தார். சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்த வெங்கடேஷ், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலை நகர் போலீசார், வெங்கடேஷின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.