/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நடைபயிற்சி சென்ற வாலிபர் வெட்டி கொலை
/
நடைபயிற்சி சென்ற வாலிபர் வெட்டி கொலை
ADDED : செப் 23, 2024 05:53 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன், 39. இவருக்கு, கடந்த 2009ம் ஆண்டு நடந்த விபத்தில், கால்களில் பாதிப்பு ஏற்பட்டு, பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.
சில மாதங்களாக, கால்களில் பாதிப்பு சரியாகி, தினமும் காலை புலிப்பாக்கத்தில் இருந்து மகாலட்சுமி நகர் வரை நடைபயிற்சிக்கு சென்று வருவார்.
நேற்று காலை, சரவணன் வழக்கம் போல நடைபயிற்சி சென்ற மகாலட்சுமி நகரில் வெட்டுக் காயங்களுடன் கிடப்பதைக் கண்ட கிராம மக்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரவணன் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணன் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.