/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : நவ 03, 2025 10:36 PM
ஊரப்பாக்கம்:  ஊரப்பாக்கத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டலுார் அடுத்த ஊரப்பாக்கம், பாலாஜி நகரில் வசிப்பவர் வாஹதா, 55. இவர், கடந்த 1ம் தேதி மாலை, உத்திரமேரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்தாருடன் சென்று, நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 34.5 கிராம் தங்க நகைகள் திருடு போனது தெரிந்தது.
சம்பவம் குறித்து, வாஹதா அளித்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த கிளாம்பாக்கம் போலீசார், நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

