/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆபத்தான முறையில் மின் கம்பியை தாங்கி நிற்கும் மரக்கம்பு
/
ஆபத்தான முறையில் மின் கம்பியை தாங்கி நிற்கும் மரக்கம்பு
ஆபத்தான முறையில் மின் கம்பியை தாங்கி நிற்கும் மரக்கம்பு
ஆபத்தான முறையில் மின் கம்பியை தாங்கி நிற்கும் மரக்கம்பு
ADDED : ஜூன் 15, 2025 01:50 AM

செய்யூர்:வெடால் கிராமத்தில் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை தாங்கி நிற்கும் மரக்கம்பால் விபத்து அபாயம் உள்ளது.
செய்யூர் அருகே வெடால் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடப்பாக்கம் துணை மின் நிலையம் வாயிலாக மின்விநியோகம் செய்யப்படுகிறது.
வயல்வெளியில் உள்ள மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் வெடால்-வயலுார் சாலை நடுவே தாழ்ந்து சென்றதால், அப்பகுதியில் செல்லும் வாகனத்தின் மீது மின் கம்பிகள் உரசி விபத்து ஏற்படும் நிலையில் இருந்தது. சில மாதங்களுக்கு முன், மரக்கட்டைகள் கொண்டு மின் கம்பிகளை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசினால் மரம் முறிந்து விபத்து ஏற்படும் நிலையில் உள்ளதால், மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் முன் தாழ்ந்து செல்லும் மின் கம்பிகளை, உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.