நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் மகள் தீபா, 21. இவர், அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
கடந்த ஐந்து நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16ல், வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவர், நள்ளிரவு நேரத்தில் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
பின், பெற்றோர், தீபா காணாமல் போனது குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். பின், அச்சிறுபாக்கம் காவல் நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அச்சிறுபாக்கம் போலீசார், காணாமல் போன தீபாவை தேடி வருகின்றனர்.

