/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி பலி
/
சாலையை கடக்க முயன்ற வாலிபர் பஸ் மோதி பலி
ADDED : ஆக 10, 2025 09:25 PM
திருப்போரூர்:கேளம்பாக்கத்தில், சாலையைக் கடக்க முயன்ற வாலிபர், அரசு பேருந்து மோதி பலியானார். திருப்போரூர், செங்கழுநீர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 35.
இவர், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை நுழைவாயில் எதிரே, ஓ.எம்.ஆர்., சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, சென்னையிலிருந்து திருப்போரூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து மோதியதில், மோகன் படுகாயமடைந்தார்.
உடனே அங்கிருந்தோர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.