/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா விமரிசை
/
வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி பெருவிழா விமரிசை
ADDED : ஜூலை 28, 2025 11:40 PM

திருப்போரூர், நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவிலில், 66ம் ஆண்டு ஆடிப் பெருவிழா, கோலாகலமாக நடந்தது.
திருப்போரூர் ஒன்றியம், நெல்லிக்குப்பம் கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேண்டவராசி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 66ம் ஆண்டு ஆடிப் பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது.
விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் காலை 4:00 மணிக்கு மங்கள இசையும், 6:00 மணிக்கு அம்மனுக்கு 108 சங்கு அபிஷேகமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு, 308 பால்குட விழா, திருமண்டப திருக்குளத்திலிருந்து கொண்டுவந்து, உற்சவருக்கு மஹா அபிஷேகம் நடந்தது.
பகல் 1:00 மணிக்கு கூட்டு வழிபாடு, தீபாராதனையும் நடந்தது. மாலை ஊஞ்சல் சேவையும், இரவு அம்மன் வீதி உலா வைபவமும் நடந்தது.