/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மனுநீதி நாள் முகாமில் 277 மனு ஏற்பு
/
மனுநீதி நாள் முகாமில் 277 மனு ஏற்பு
ADDED : அக் 18, 2024 08:59 PM
அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி குறுவட்டத்திற்கு உட்பட்ட அனந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், நேற்று மனுநீதி நாள் முகாம் நடந்தது.
இதில், சமூக பாதுகாப்பு திட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்வாரியம், வேளாண்மை, மகளிர் உரிமைத்தொகை, ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு மற்றும் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட துறைகளில், மொத்தம் 277 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், வருவாய் மற்றும் பேரிடர் துறை, தொடக்க வேளாண்மை துறை, மகளிர் சுய உதவி குழு கடன், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சலவைப் பெட்டி வழங்குதல், இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகளில், தேர்வு செய்யப்பட்ட 108 பயனாளிகளுக்கு, 44.92 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், வட்டாட்சியர் துரைராஜன், அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர், ஊராட்சி தலைவர் பாரத பாபு, அரசு துறைகளின் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.