/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'மில்லிங்' செய்த தேசிய நெடுஞ்சாலை கைவிடப்பட்டதால் விபத்து அபாயம்
/
'மில்லிங்' செய்த தேசிய நெடுஞ்சாலை கைவிடப்பட்டதால் விபத்து அபாயம்
'மில்லிங்' செய்த தேசிய நெடுஞ்சாலை கைவிடப்பட்டதால் விபத்து அபாயம்
'மில்லிங்' செய்த தேசிய நெடுஞ்சாலை கைவிடப்பட்டதால் விபத்து அபாயம்
ADDED : ஜன 16, 2025 12:25 AM

மறைமலை நகர், திருச்சி --- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, தென்மாவட்டங்களை சென்னையுடன் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை.
இந்த சாலையில் பரனுார் சுங்கச்சாவடி முதல் ஆத்துார் சுங்கச்சாவடி வரை, புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சாலையில், தாம்பரம் மார்க்கத்தில், புலிப்பாக்கம் தரைப்பாலம் மற்றும் பரனுார் சுங்கச்சாவடி பகுதியில் 100 மீட்டர் பழைய சாலை அகற்றப்பட்டு, நான்கு மாதங்கள் கடந்த நிலையில், புதிய சாலை அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
சாலை பெயர்ந்து எடுக்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்த நிலையில், புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் வேகமாக செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து ஒருபுறமாக இழுத்துச் செல்வதால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
தற்போது பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த பகுதியில் விரைந்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.