/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
/
மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் பள்ளங்களால் விபத்து அபாயம்
ADDED : பிப் 18, 2024 02:39 AM

கூவத்துார் : கூவத்துார் அருகே உடல்காரக்குப்பம் பகுதியில், மதுராந்தகம் - கூவத்துார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
மதுராந்தகம், பவுஞ்சூர், கூவத்துார், செய்யூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல, இதுவே பிரதான சாலை.
இப்பகுதியில் செயல்படும் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களுக்கு, அதிகப்படியான லாரிகள் வந்து செல்வதால், சாலையின் நடுவே பள்ளங்கள் ஏற்பட்டு, சேதமடைந்து உள்ளது.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை நடுவே ஏற்பட்டு உள்ள பள்ளங்களால், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றனர் என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டு உள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.