/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரெட்டிபாளையம் தரைப்பாலத்தில் கம்பிகளால் விபத்து அபாயம்
/
ரெட்டிபாளையம் தரைப்பாலத்தில் கம்பிகளால் விபத்து அபாயம்
ரெட்டிபாளையம் தரைப்பாலத்தில் கம்பிகளால் விபத்து அபாயம்
ரெட்டிபாளையம் தரைப்பாலத்தில் கம்பிகளால் விபத்து அபாயம்
ADDED : ஜன 17, 2025 02:06 AM

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை 13 கி.மீ., துாரம் நீளம் உடையது. இந்த சாலையை பாலுார், ரெட்டிபாளையம்,வெண்பாக்கம், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் வெண்பாக்கம் -- ரெட்டிபாளையம் இடையே காஞ்சிபுரம் மாவட்டம், தென்னேரி ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது 24 மீட்டர் தரைப்பாலம் உள்ளது.
இதில், 2023ம் ஆண்டு, 78 லட்ச ரூபாய் மதிப்பில், 15 மீட்டர் துாரம் தரைப்பாலம் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு தரைப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தரைப்பாலத்தின் நடுவே சாலையில், கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. கம்பிகள் நீட்டியபடி வெளியில் உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் தரைப்பாலம் புதிதாக அமைத்தும் மழைக்காலங்களில் வெள்ளத்தில் பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. தற்போது, கான்கிரீட், கம்பிகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வாகன ஓட்டிகள் கூறினர்.