/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மூடுகால்வாய் 'சிலாப்' பெயர்த்தெடுப்பு கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
/
மூடுகால்வாய் 'சிலாப்' பெயர்த்தெடுப்பு கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
மூடுகால்வாய் 'சிலாப்' பெயர்த்தெடுப்பு கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
மூடுகால்வாய் 'சிலாப்' பெயர்த்தெடுப்பு கூடுவாஞ்சேரியில் விபத்து அபாயம்
ADDED : அக் 31, 2025 01:23 AM

கூடுவாஞ்சேரி:  நந்திவரம் -- கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே, கான்கிரீட் மூடுகால்வாயில் உள்ள அபாய பள்ளங்களை மூட வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திலிருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், சென்னை, செங்கல்பட்டு மார்க்கத்தில், பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தின் உட்புற சுற்றுச்சுவர் ஓரமாக, 300 அடி நீளம், 5 அடி அகலம், 10 அடி ஆழத்தில், கான்கிரீட் மூடுகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் நடைமேடையாகவும் பயன்படுகிறது.
இந்த மூடுகால்வாய் மேலே உள்ள கான்கிரீட் 'சிலாப்'கள், பல இடங்களில் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால், நடை மேடையின் பல இடங்களில் 6 சதுர அடி அகலத்தில், ஓட்டைகள் உள்ளன.
பேருந்து நிலையத்திற்கு வரும் பயணியர் கவனக் குறைவாக இந்த ஓட்டைக்குள் விழுந்தால், படுகாயமடையவும், உயிர் பலி ஏற்படவும் வாய்ப்புள்ளது.
மேலும் ஆடு, மாடு ஆகிய கால்நடைகள் தவறி விழுந்து உயிரிழக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால்வாய் மீது மீண்டும் கான்கிரீட் சிலாப்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

