/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கச்சூர் பகுதியில் விபத்து அபாயம் இரும்பு தடுப்பு வைக்க வலியுறுத்தல்
/
திருக்கச்சூர் பகுதியில் விபத்து அபாயம் இரும்பு தடுப்பு வைக்க வலியுறுத்தல்
திருக்கச்சூர் பகுதியில் விபத்து அபாயம் இரும்பு தடுப்பு வைக்க வலியுறுத்தல்
திருக்கச்சூர் பகுதியில் விபத்து அபாயம் இரும்பு தடுப்பு வைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 01, 2025 11:10 PM

மறைமலைநகர்:செங்கல்பட்டு புறநகரில் வளர்ந்து வரும் பகுதியாக, சிங்கபெருமாள்கோவில் உள்ளது.
இங்கு, சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்ரீபெரும்புதுார், ஒரகரம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றன.
மேலும் திருக்கச்சூர், ஆப்பூர், கொளத்துார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, இந்த சாலை வழியாக வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் அடிக்கடி ரயில்வே 'கேட்' மூடப்பட்டு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, இங்கு ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் மார்க்கத்தில் இருந்து தாம்பரம் மார்க்கத்தில் வாகனங்கள் செல்லும் வகையில், மேம்பாலத்தின் ஒரு பக்கம் பணிகள் நிறைவடைந்து, கடந்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
தற்போது சிங்கபெருமாள்கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்து உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சாலையில் திருக்கச்சூர் ஆபத்துக் கால்வாய் பகுதியில் மேம்பாலத்தின் மீது செல்லும் சாலையும், பழைய ரயில்வே கேட் செல்லும் சாலையும், இரண்டாக அகலமாக பிரிந்து செல்கின்றன.
இதனால் வேகமாக வரும் கனரக வாகனங்களால், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியில் ஆறுவழி மாநில நெடுஞ்சாலை குறுகலாகி, இருவழிச் சாலையாக செல்லும். தற்போது மேம்பாலம் திறக்கப்பட்டதில் இருந்து, அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, இங்கு சிறு சிறு விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த வாரம் வேகமாக வந்த குப்பை லாரி, டூவீலரில் குடும்பத்துடன் சென்றவர் மீது மோதி, டூ-வீலர் சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனவே, வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, இங்கு இரும்பு தடுப்புகள் அமைக்க, போக்குவரத்து போலீசார் அல்லது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.