/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கல் குவாரி லாரிகளால் விபத்துகள் சித்தாமூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
கல் குவாரி லாரிகளால் விபத்துகள் சித்தாமூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கல் குவாரி லாரிகளால் விபத்துகள் சித்தாமூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
கல் குவாரி லாரிகளால் விபத்துகள் சித்தாமூரில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 25, 2025 11:06 PM

சித்தாமூர், சித்தாமூரில், கல்குவாரி லாரியை முற்றுகையிட்டு, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தாமூர் சுற்றுவட்டார பகுதிகளான தொன்னாடு, சரவம்பாக்கம், கொளத்துார், பொலம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 15க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த கல் குவாரிகளுக்கு தினமும் ஏராளமான லாரிகள் அதிக பாரம் ஏற்றிச் செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கல்குவாரி லாரிகளால் ஏற்படும் விபத்துகளை கண்டித்து, சித்தாமூரில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் பிரவின்குமார் தலைமையில், கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல் குவாரிகள் தொடர்ந்து செயல்பட்டால் ஏற்படும் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, விவசாய பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து, கண்டன கோஷம் எழுப்பினர்.
அந்த நேரத்தில் ஒரு லாரி அதிக பாரம் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக சென்றது. ஆத்திரமடைந்த பா.ஜ.,வினர், லாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின், சித்தாமூர் போலீசார் அந்த லாரியை, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.