/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அசுர வேக வாகனங்களால் விபத்து ஆப்பூர் சாலையில் தடுப்பு அவசியம்
/
அசுர வேக வாகனங்களால் விபத்து ஆப்பூர் சாலையில் தடுப்பு அவசியம்
அசுர வேக வாகனங்களால் விபத்து ஆப்பூர் சாலையில் தடுப்பு அவசியம்
அசுர வேக வாகனங்களால் விபத்து ஆப்பூர் சாலையில் தடுப்பு அவசியம்
ADDED : பிப் 14, 2025 01:17 AM

சிங்கபெருமாள் கோவில்,:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
நெடுஞ்சாலையை சுற்றியுள்ள சேந்தமங்கலம், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அடிப்படை தேவைகளுக்கு செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் பகுதிகளுக்கு சென்று வர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் வாகனங்களும் இச்சாலையில் சென்று வருகின்றன.
இந்த சாலையில், ஆப்பூர் பெட்ரோல் பங்க் சந்திப்பை கடந்து அப்பகுதி மக்கள் அரசு பள்ளி, அங்கன்வாடி மையம், நியாய விலை கடைகளுக்குச் சென்று வருகின்றனர்.
இந்த பகுதியில் அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதால், அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, வேகத்தை கட்டுப்படுத்த, இரும்பு தடுப்புகள் அமைக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலையைக் கடந்து செல்வோர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி வருகின்றனர்.
கடந்த 10ம் தேதி, குழந்தையுடன் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது கார் மோதியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். இது போன்ற விபத்துகள் தொடர்கதையாக உள்ளதால், நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த, சாலையின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.