/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சங்குதீர்த்தகுள கால்வாயில் கட்டட இடிபாடுகள் குவிப்பு
/
சங்குதீர்த்தகுள கால்வாயில் கட்டட இடிபாடுகள் குவிப்பு
சங்குதீர்த்தகுள கால்வாயில் கட்டட இடிபாடுகள் குவிப்பு
சங்குதீர்த்தகுள கால்வாயில் கட்டட இடிபாடுகள் குவிப்பு
ADDED : அக் 30, 2024 01:52 AM

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் சங்குதீர்த்தகுள கால்வாயில், கட்டட இடிபாடுகளை குவித்து துார்க்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இக்கோவில் உள்ளது.
இக்கோவில் புனித தீர்த்தமாக, சங்குதீர்த்தகுளம் விளங்குகிறது. மார்கண்டேய முனிவர், இத்தலத்தில் சிவனை வழிபட்டபோது, குளத்தில் தோன்றிய சங்கில், குளத்துநீரை நிரப்பி, இறைவனுக்கு அபிஷேகம் செய்தார் என்பது ஐதீகம்.
தற்போதும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சங்கு தோன்றுகிறது. கடைசியாக, கடந்த மார்ச் 7ம் தேதி புனித சங்கு தோன்றியது.
வேதகிரீஸ்வரர் கோவில் மலைகுன்று, காக்கைகுன்று ஆகிய பகுதிகளிலிருந்து பெருக்கெடுக்கும் மழைநீர், இக்குளத்தை அடைய பிரத்யேக கால்வாய்கள் உள்ளன.
காக்கைகுன்று சுற்றுபுற மழைநீர் குளத்தை அடையவும், குளம் நிரம்பினால் வெளியேறவும், குளத்தின் தென்மேற்கு பகுதியில் யானை மதகு என்ற கால்வாய் உள்ளது. இதையொட்டி வீடு கட்டியுள்ளோர், படிப்படியாக கால்வாயை துார்த்து வருகின்றனர்.
பழைய கட்டடடங்களில் இடிக்கப்பட்ட கழிவுகள், தற்போது கால்வாயில் குவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழையின்போது குளத்திற்கு நீர்வரத்து தடைபடும்.
எனவே, கால்வாயை துார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், கால்வாயை துார்வாரி பராமரிக்கவும், பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.