/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொசு மருந்து தெளிப்பதில்லை இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
/
கொசு மருந்து தெளிப்பதில்லை இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
கொசு மருந்து தெளிப்பதில்லை இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
கொசு மருந்து தெளிப்பதில்லை இடைக்கழிநாடில் குற்றச்சாட்டு
ADDED : அக் 04, 2024 08:24 PM
செய்யூர்,:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், நோய் தடுப்பு நடவடிக்கையாக, குடியிருப்புப் பகுதி, பஜார், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில், இடைக்கழிநாடு பேரூராட்சி சார்பாக, கொசு மருந்துகள் மற்றும் பிளீச்சிங் பவுடர் போடுவது வழக்கம்.
ஆனால், பேரூராட்சிக்கு சொந்தமான இரண்டு கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள், பல மாதங்களாக பழுதடைந்து இருப்பதால், குடியிருப்புப் பகுதியில், பேரூராட்சி சார்பாக கொசு மருந்து அடிப்பதில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
பருவ மழை இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை சீரமைத்து, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.